`இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் அபாயத்தில் இருக்கிறது!’ - ஏ.ஐ.டி.யூ.சி எச்சரிக்கைSponsored``இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படக்கூடிய அபாயத்தில் இருக்கிறது'' என ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் மூர்த்தி எச்சரித்துள்ளார். 

தூத்துக்குடி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், `அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம், இந்தியாவைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் வரும் ஆகஸ்ட்  9-ம் தேதி பிரசார பயணத்தைத் தொடங்க உள்ளோம்.  தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேதாரண்யம், வேலுார், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய 6 இடங்களிலிருந்து ஒரே நாளில் கிளம்பி, ஆகஸ்ட் 15-ம் தேதி, திருப்பூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சந்திக்க உள்ளோம்.

Sponsored


அம்பேத்கர் தலைமையில்  எழுதப்பட்ட அரசியல் சட்டத்தை மாற்றி, மனுஸ்மிதியை இந்தியாவின் சட்டமாக்குவோம் என்று ஓர் அமைச்சர் பேசுகிறார். இந்தியாவில், உணவின் பெயரால், கலாசாரத்தின் பெயரால், கும்பல் கும்பலாக மக்களைக் கொல்லும் புதிய கலாசாரம் பரவி வருகிறது. மக்களின் பொருளாதாரம் மொழி, பண்பாடு, வாழ்க்கை ஆகியவை பறிக்கப்படும் நிலை உள்ளது.  

Sponsored


நுாறு ஆண்டுக்காலம் தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டப் பயன்களை எல்லாம் இந்த அரசாங்கம் பறித்தெடுக்கிறது. மொழி, மாநில உரிமைகள் இவற்றை எல்லாம் மத்திய அரசாங்கம் சிதைத்துகொண்டு இருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க  வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்; சாம்பாதித்ததைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என வாய்மூடி மவுனியாக இருக்கிறார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியின் பாக்கெட்டில் இருக்கிறார். மோடி கார்ப்பரேட்களின் பாக்கெட்டில் இருக்கிறார். இந்தியாவின் சுதந்திரம் பறிபோய்கொண்டு இருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படக்கூடிய அபாயத்தில் இருக்கிறது. எனவேதான், இந்திய மக்களை விழிப்படையச் செய்ய வேண்டி, `வெள்ளையனே வெளியேறு' என்ற முழக்கம் தொடங்கிய, ஆகஸ்ட் 9-ம் தேதி பிரசார பயணத்தைத் தொடங்க இருக்கிறோம்" என்றார்.Trending Articles

Sponsored