கருணாநிதியின் உடல்நிலையை விசாரித்த விஜய்! மருத்துவமனையின் பின்வாசல் வழியாகச் சென்றார் #KarunanidhiSponsoredநடிகர் விஜய்,  தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலைகுறித்து நலம் விசாரிக்க, காவேரி மருத்துவமனைக்கு வருகைதந்துள்ளார். 


 

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த ஐந்து நாள்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், கருணாநிதியின் உடல்நிலைகுறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். கடந்த ஐந்து நாள்களாக தி.மு.க தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் வெயில் மழையைப் பொருட்படுத்தாமல் காத்துக்கிடக்கின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று மாலை கருணாநிதியை சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டது. கருணாநிதியின் புகைப்படத்தைப் பார்த்த தொண்டர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இதையடுத்து, நேற்றிரவு நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்கு வந்து, மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார்.

Sponsored


Sponsoredஇன்று காலை, நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மு.க.ஸ்டாலின் வர சற்று தாமதமானதால், அரை மணி நேரம் காவேரி மருத்துவமனை அருகே காத்திருந்துள்ளார். காரின் கண்ணாடிகள் மூடப்பட்டிருந்ததால், அங்கிருந்த மக்களுக்கு நடிகர் விஜய் உள்ளே இருப்பது தெரியவில்லை. பின்னர், மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்ததும், உள்ளே சென்று கருணாநிதியின் உடல்நிலைகுறித்து கேட்டறிந்த விஜய், பின்வாசல் வழியாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். மருத்துவமனையில் சலசலப்பு ஏற்படும் என்பதால், விஜய் சத்தமில்லாமல் வந்து, பின்வாசல் வழியாகச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.Trending Articles

Sponsored