அதிவேகத்தில் வந்த ஆடி கார்! - சாலையோரத்தில் நின்ற 6 பேர் உயிரிழப்பு; கோவையில் அதிர்ச்சி!Sponsoredகோவையில், பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள்மீது ஆடி கார் மோதியதில், 6 பேர்  பரிதாபமாகப் பலியாகினர்.


 

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரம் பகுதியில், பேருந்துக்காக சாலையோரம் மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது, கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்த ஆடி கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது மோதியது. அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் மீதும் மோதியது.  இந்த விபத்தில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  4 பெண்கள், 2 ஆண்கள் உட்பட  6 பேர் உயிரிழந்தனர்.

Sponsored 

Sponsored


சாலையோரம் பூக்கடை வைத்திருந்த பெண், பேருந்துக்காகக் காத்திருந்த 18 வயது கல்லூரி மாணவி உள்ளிட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்ததையடுத்து, விபத்து ஏற்படுத்திய காரை மக்கள் முற்றுகையிட்டனர். காரை ஓட்டிவந்தவர் மதுபோதையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.


 

இந்த விபத்துகுறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில்,  `இந்தச் சாலையில் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். ஆனால், விபத்து ஏற்படுத்திய இந்த நபர், மதுபோதையில் அதிவேகத்தில் காரை ஓட்டி வந்துள்ளார். இந்தச் சாலையில், ஸ்பீடு பிரேக்கர் வைக்குமாறு அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறோம். அரசு செவிசாய்க்கவில்லை. இந்த விபத்துக்கு அதுவும் ஒரு காரணம். இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கிறது. ஆனால் மதுபோதையில்  காரை ஓட்டி வந்தவருக்கு சின்ன காயம் கூட ஏற்படவில்லை. அப்பாவி மக்கள் பலியாகிவிட்டனர்’ என்றனர்.

விபத்து ஏற்படுத்திய நபர்..
 

இந்தக் கோர விபத்தில் காயமடைந்தவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். மாவட்ட ஆட்சியர், அவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். விபத்தை ஏற்படுத்திய கார், ரத்தினம் கல்லூரியின் சேர்மேன் மதன் செந்திலுக்குச் சொந்தமான கார் என்றும் காரை ஓட்டி வந்தவர் பெயர் ஜெகதீசன் என்றும் கூறப்படுகிறது.  மதன் செந்திலின் கார் ஓட்டுநரான ஜெகதீசன், அவரை பிக் அப் செய்வதற்காக வந்த போது இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்தின் சிசிடிவி காட்சி.. Trending Articles

Sponsored