செல்போன் ஆப் மூலம் அந்தரங்கத் தகவல் திருட்டு: உறவுக்கார பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது!Sponsored ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய  செயலிமூலம், பல பெண்களின் அந்தரங்க விவகாரங்களைப் படம்பிடித்து மிரட்டிவந்த ராமநாதபுரம்  வாலிபரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


 

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகில் உள்ள தாமரை ஊரணி பகுதியைச் சேர்ந்தவர், கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் வெளிநாட்டில் வேலைசெய்துவருகிறார். கமலாவுக்கு, தம்பி உறவுமுறை கொண்டவர் தினேஷ்குமார் (24). தனியார் கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் டெக்னீஷியனாகப் பணிபுரிந்துவந்துள்ளார். 

Sponsoredதினேஷ்குமார், தனது உறவுக்கார பெண்ணான கமலா வீட்டுக்கு விருந்துக்குச் சென்றுள்ளான். அவனிடம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்  அனுப்பிய ஸ்மார்ட் போனைக் கொடுத்து,அதில் வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளைப் பதிவிறக்கம் செய்து கேட்டுள்ளார் கமலா. அந்த ஸ்மார்ட் போனில், டிராக் செய்யும் செயலியையும் பதிவிறக்கம் செய்து கொடுத்த தினேஷ்குமார்,  கமலாவுக்குத் தெரியாமல் அவரது செயல்பாடுகளைத் தனது செல்போன்மூலம் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்படுத்தியுள்ளான்.

Sponsored


கமலா, தனது  கணவருடன் பேசும் அத்தனை அந்தரங்க விவகாரங்களையும் தன்னுடைய மொபைல் ஆப் மூலம் லேப் டாப்பில் பதிவு செய்துள்ளான் தினேஷ் குமார். அவர், கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவுசெய்துள்ளான்.  இவற்றை வைத்துக்கொண்டு  தான் யார் என்று தெரிவிக்காமல், அக்கா முறை என்று கூடப் பாராமல், கமலாவை மிரட்டி ஆசைக்கு இணக்கும்படி வற்புறுத்தியுள்ளான். பணியாவிட்டால், அந்தரங்கக் காட்சிகளையும் படங்களையும் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளான்.

இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக செய்வதறியாமல் தவித்த அந்தப் பெண், இந்த விவகாரத்தை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த யோசனைப்படி, ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி, அங்கு வந்தால் தனிமையில் சந்திக்கலாம் என்று கூறி தினேஷ்குமாரின் செல்போனுக்கு மெசேஜ்  அனுப்பியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய தினேஷ் குமார், அங்கு வந்துள்ளான். அவனை பார்த்ததும் கமலாவுக்கும், அங்கு மறைந்திருந்த அவரது உறவினர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. 

உடனடியாக தினேஷ் குமாரைப் பிடித்து விசாரித்தபோது அவன்தான் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆப் மூலம் திருடி வைத்துக்கொண்டு மிரட்டியவன் என்பது தெரியவந்தது. அவனைப் பிடித்து தர்மஅடி கொடுத்து, தேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 

இதையடுத்து, அவனிடம் விசாரணைசெய்த போலீஸார், அவனது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கிருந்து 2 லேப்டாப், 3 செல்போன்கள் மற்றும் சில பெண்களின் ஆடைகளையும் பறிமுதல்செய்தனர். அவனது வீட்டில் பெண்களின் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, தினேஷ்குமார், தான் சந்தித்த உறவுக்கார பெண்கள்,தோழிகள் என அனைவரது ஸ்மார்ட் போனையும் வாங்கிப் பார்ப்பதுபோல அவர்களின் போனில் செயலியைப் பதிவிறக்கம்செய்து, அவற்றைத் தனது செல்போன் மற்றும் லேப்டாப் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளான்.

அந்தரங்கக் காட்சிகளுடன் சிக்கும் பெண்களை மிரட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளான். அப்படி ஆசைக்கு இணங்கிய பெண்களின் ஆடைகளை மட்டும் அவனது வீட்டில் சேகரித்து வைத்திருந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும், ஆசைக்கு இணங்காத பெண்களின் வீடியோக்களை ஆன்லைன்மூலம் வெளி நாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு விற்பனைசெய்துள்ளான் எனவும் கூறப்படுகிறது. 

அவனது லேப்டாப்பில் இருந்து 80-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்கக் காட்சிகளும், 140-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க உரையாடல்களும் பதிவுசெய்யபட்டுள்ளன. இதில், தினேஷ்குமாரின் உறவினர்கள் பலரும் உள்ளதாகத் தெரிகிறது என்கின்றனர் காவல்துறையினர். இதில், தினேஷ்குமாரின் உடன் பிறந்த சகோதரி தனது கணவரிடம் பேசிய அந்தரங்க விஷயங்களும் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, தினேஷ்குமார் மீது தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்த தேவிபட்டினம் போலீஸார், தினேஷ்குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள்குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

என்னதான் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தாலும் அவர்களிடம் தங்களது செல்போன்கள், லேப்டாப்புகள் போன்றவற்றை கொடுக்கும் போது பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். அவற்றின் மூலம் தங்களுடைய அந்தரங்க விசயங்கள், படங்கள் போன்றவற்றை பயன்படுத்தி மிரட்டும் தினேஷ்குமார் போன்ற கயவர்களிடம் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.Trending Articles

Sponsored