சிலைக் கடத்தல் வழக்கு - சி.பி.ஐ.க்கு மாற்றம் ஏன்?Sponsoredசிலைக் கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்கத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை தெரிவித்துள்ளது.  

சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை இவர் தலைமையிலான குழு மீட்டிருக்கிறது. இந்நிலையில் சிலைகள் விஷயத்தில் தமிழக அரசு அழுத்தம் வருவதாகவும், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார். 
 
இந்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை மோசடி வழக்கில் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் மீனாட்சி விசாரித்த வழக்கில் அறநிலையத்துறை திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா உட்பட ஆறு பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்தவழக்கும் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு வந்தது. அதனடிப்படையில் கவிதா நேற்று காலை கைது செய்யப்பட்டு, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 
  
கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல கோயில்களில் சிலைகள் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சிலைகள் கடத்தல் மற்றும் மோசடி வழக்கில் சில அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர். அதனால் அறநிலையத்துறை இந்நாள் முன்னாள் அதிகாரிகள் பலரும் ஆட்டம் கண்டிருந்தனர். உயர் பதவியில் இருக்கும் சிலரும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்படலாம் என்றிருந்த நிலையில் 'சிலைக் கடத்தல் வழக்குகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரிப்பதில் தமிழக அரசுக்குத் திருப்தி இல்லை' என்று சிலை கடத்தல் வழக்குகளைத் தானாக முன்வந்து சி.பி.ஜ.க்கு மாற்றி இருக்கிறது தமிழக அரசு.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored