ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட சல்பியூரிக் ஆசிட் கசிவினால் 2 தொழிலாளர்கள் காயம்!Sponsoredதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அமிலங்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட சல்பியூரிக் ஆசிட் கசிவினால், 2 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர். 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, மக்களின் முற்றுகைப் போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூட்டின் காரணமாக கடந்த மே 28-ம் தேதி `ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்' என அரசாணை வெளியிடப்பட்டு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 16-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதையடுத்து, சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாவட்டச் சுற்றுச்சூழல் வாரியப் பொறியாளர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி, வட்டாட்சியர்கள் ஆகியோர் அடங்கியக் குழுவினர் 17-ம் தேதி ஆய்வு செய்து, அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். தொடர்ந்து, கசிவும் சரி செய்யப்பட்டது.

Sponsored


மறுநாள், 18-ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி துவங்கி நடைபெற்றது. இந்நிலையில், மற்ற அமிலங்களின் இருப்பு நிலை குறித்தும் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையின் படி, மீதமுள்ள ஆசிட் வகைகளை 30 நாள்களுக்குள் வெளியேற்றிட அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஆலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள சல்பியூரிக் ஆசிட், பாஸ்பாரிக் ஆசிட், ஜிப்சம், ராக் பாஸ்பேட் ஆகியவைகள் ஜெனரேட்டர் மூலமாக பம்பிங் செய்யப்பட்டு டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்றி இவற்றை மூலப்பொருளாகக் கொண்டு செயல்பட்டு வரும் கம்பெனிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

Sponsored


மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வரும், ஆசிட் அகற்றும் இப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சல்பியூரிக் ஆசிட் சேமிப்புக் கலனில் உள்ள வால்வினை திறக்கும்போது, வெளியேறிய ஆசிட் கசிவினால் தூத்துக்குடி கிருபைநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் அத்திமரப்பட்டியைச் சேர்ந்த ஜெய்சங்கர் ஆகியோர் காயமடைந்தனர். இதில், பாலசுப்பிரமணியனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு காயம் சரி செய்யப்பட்டது.  ஜெய்சங்கர் 20 சதவிகிதம் காயம் ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே ஆலையிலிருந்து ஆசிட் கசிவு ஏற்பட்டு சரிசெய்யப்பட்ட நிலையில், தற்போது ஆசிட் கசிவினால் 2 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Trending Articles

Sponsored