மாற்றுச் சிந்தனையாளர்களையும் மதிக்கத் தெரிந்த தலைவர்! - கருணாநிதி நலம்பெற வேண்டி சேலத்தில் சிறப்புப் பூஜைSponsored``கலைஞர் வழி வேறு, கடவுள் வழி வேறு என்றாலும் கலைஞரின் கருணை வழியால் எங்களுக்கு வாரியம் அமைத்து, இலவச சைக்கிள் கொடுத்த திருவாரூர் சொக்கத் தங்கம் எங்கள் கலைஞர் கருணாநிதி. அவர் குணமடைந்து சீக்கிரத்தில் வீடு திரும்ப வேண்டும்'' என்று கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் சார்பாக சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பிரார்த்தனை செய்தார்கள்.

இதுகுறித்து கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு கூறுகையில்,``தலைவர் கலைஞர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு கோயில் பூசாரிகளும் மனதளவில் இறைவனிடம் கலைஞர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறோம்.

Sponsored


கோயில் பூசாரிகள் நலச்சங்கத்தின் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உள்ள 16,000 கோயில்களிலும் கலைஞர் விரைவில் குணம்பெற வேண்டி சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டோம். அதன் தொடர்ச்சியாக இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜை செய்து பிரார்த்தனை செய்கிறோம். கலைஞரின் வழி வேறு, கடவுளின் வழி வேறு என்றாலும் தமிழகத்தில் பிரிந்து கிடந்த பூசாரிகளை ஒருங்கிணைத்தவர் கலைஞர்.

Sponsored


எங்களுக்குத் தனி வாரியத்தை ஏற்படுத்தி, அடையாள அட்டை வழங்கி, எங்களுக்கு இலவச சைக்கிள்களை கொடுத்தார். கோயில் பெயரில் உள்ள பணத்துக்கான வட்டியை அறங்காவலர்கள் பெற்று எங்களுக்கு அதில் சிறு தொகையைக் கொடுத்து பூஜை செய்யச் சொல்வார்கள். கலைஞர் ஆட்சியில் வங்கியில் உள்ள கோயில் பணத்துக்கான வட்டியை பூசாரிகளே நேரடியாகப் பெற்று தினந்தோறும் சிறப்பாக பூஜைகள் நடத்த உத்தரவிட்டார். இப்படி மாற்றுச் சிந்தனையாளர்களையும் மதிக்கும் உன்னதத் தலைவர் விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவார்'' என்றார்.Trending Articles

Sponsored