மறுகூட்டலில் முறைகேடு - அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்மீது வழக்குப்பதிவு!Sponsoredஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உட்பட, 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில், அதிக அளவு மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தனர். இதையடுத்து, சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில், சுமார் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மறுகூட்டலில் தேர்ச்சிபெற்றனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றனர். இந்நிலையில், இந்த மறுகூட்டலில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்குவதற்காக, மாணவர்களிடமிருந்து ரூபாய்  10,000 வாங்கியதாக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உட்பட சிலர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

Sponsored


இந்தக் குற்றச்சாட்டுக்கு நடுவில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவுசெய்துள்ளது  தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா, உதவிப்பேராசிரியர் விஜயகுமார், சிவக்குமார், சுந்தர்ராஜன், மகேஷ்பாபு உள்ளிட்ட 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களிடம் விரைவில் விசாரணை நடக்க உள்ளது. இவ்விகாரம், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored