சிறப்பாசிரியர்கள் தேர்வுப் பட்டியலில் குளறுபடி; கேள்விக்குறியாகும் வாழ்க்கை..! வேதனையில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள்Sponsored'ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள சிறப்பாசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளோம்' என்று பகுதி நேர மாற்றுத்திறனாளி கலைப்பாட ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். 

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆகியவற்றைக் பயிற்சிவிக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது வரும் 13-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய பகுதி நேர மாற்றுத்திறனாளி கலைப்பாட ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், 'தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் தையல், ஓவியம் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆறு ஆண்டுகளுக்குமுன் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளோம். தற்போது,சுமார் ஆறு ஆண்டுகளைக் கடந்து தற்போது, வெறும் 7,700 ரூபாய் சம்பளத்துக்கு பகுதி நேர ஆசிரியர்களாகவே பணி புரிந்து வருகிறோம். 

Sponsored


செப்டம்பர் மாதம் நடைபெற்ற சிறப்பாசிரியர்களுக்கானத் தேர்வை நாங்கள் எழுதி அதில் தேர்சியடைந்துள்ள போதிலும், எங்களுக்கு உரிய பணி நியமணம் வழங்கப்படவில்லை. மேலும், அந்தத் தேர்ச்சிப் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. பணியில் 4% இட ஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், அதன்படி உரிய இடம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால், நாங்கள் பகுதி நேர ஆசிரியர்களாகவே தொடரவேண்டிய சூழல் உள்ளது. எங்களுடைய வாழ்கையும் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அரசு வெளியிட்டுள்ளப் பட்டியலை எதிர்த்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம்' என்று தெரிவித்தார்.

Sponsored
Trending Articles

Sponsored