திருப்பரங்குன்றம் அ.தி.மு.க எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்!Sponsoredதிருப்பரங்குன்றம் அ.தி.மு.க எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்.

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசித்துவரும் இவருக்கு நள்ளிரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரின் குடும்பத்தினர், உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர் . ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 69 வயதான ஏ.கே.போஸ், அ.தி.மு.க சார்பில் மூன்று முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

Sponsored


இதில் இரண்டு முறை, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு எஸ்.எம்.சீனிவேல் வெற்றிபெற்றார். ஆனால், உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  அதன்பின்னர் நடந்த இடைத்தேர்தலில், போஸ்  வெற்றிபெற்றார்.

Sponsored
Trending Articles

Sponsored