ஆண் நண்பனுக்காக மனைவி செய்த செயலில் அதிர்ந்த கணவர்Sponsoredவேலூர் மாவட்டத்தில், ஆண் நண்பனுக்காக மனைவி செய்த செயலால், அவரின் கணவர் அதிர்ச்சியடைந்தார். தற்போது, கணவருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை. இவர், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. செந்தாமரையின் மர்ம உறுப்பை அவரின் மனைவி ஜெயந்தி தாக்கிவிட்டதாக கே.வி.குப்பம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததும், இந்த வழக்கை விசாரித்துவருகின்றனர். சம்பவத்தன்று, ஜெயந்தியிடம் என்ன நடந்தது என்று போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

Sponsored


இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``செந்தாமரை கூலி வேலை செய்துவருகிறார். அவருக்கு வயது 50. அவரின் மனைவி ஜெயந்திக்கு 40 வயது. ஆடிமாதம் என்பதால், அவர்கள் குடியிருக்கும் கிராமத்தில் சில நாளுக்கு முன்பு கோயில் திருவிழா நடந்துள்ளது. சம்பவத்தன்று இரவு நடந்த கோயில் விழாவுக்குச் செல்ல மனைவியை அழைத்துள்ளார் செந்தாமரை. ஆனால், அவர் வரவில்லை என்று கூறிவிட்டார். இதனால் திருவிழாவைப் பார்க்க செந்தாமரை மட்டும் தனியாகச் சென்றார். 

Sponsored


விழா முடிவதற்குள் வீட்டுக்கு திரும்பினார் செந்தாமரை. அப்போது ஜெயந்தி, தன்னுடைய ஆண் நண்பருடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த செந்தாமரைக்கு ஆத்திரம் ஏற்பட்டது.  அதனால், ஆண் நண்பரை அடித்து உதைத்தார். வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய ஜெயந்தி, தன்னுடைய கணவரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் செந்தாமரையோ, ஜெயந்தியின் ஆண் நண்பரை நையப் புடைத்தார். இந்தச் சமயத்தில் ஆண் நண்பரைக் காப்பாற்ற செந்தாமரையின் மர்ம உறுப்பைத் தாக்கியுள்ளார் ஜெயந்தி. இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ளோம். ஜெயந்தியிடமும் அவரின் ஆண் நண்பரிடமும் விசாரணை நடந்துவருகிறது" என்றனர். 

இந்தச் சம்பவம், வேலூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. Trending Articles

Sponsored