`தப்புசெய்தது உண்மைதான்... ரூ.5 லட்சம் கேட்கல'- காதலியின் பெயரை பச்சை குத்திய கல்லூரி மாணவர் Sponsoredசென்னை வளசரவாக்கத்தில், ப்ளஸ் ஒன் மாணவி விவகாரத்தில் கைதான கல்லூரி மாணவர் போலீஸாரிடம், `தப்பு செய்தது உண்மைதான். ஆனால், 5 லட்ச ரூபாய் கேட்கவில்லை' என்று தெரிவித்துள்ளார். 

சென்னை வளசரவாக்கத்தில், ப்ளஸ் ஒன் மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார் நெற்குன்றத்தைச் சேர்ந்த விக்னேஷ். இவர் மீது மாணவியை வீடியோ எடுத்தது, அதை வெளியில் விடுவதாக மிரட்டியதோடு, 5 லட்சம் ரூபாய் கேட்டது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கை வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியார் விசாரித்தார். விசாரணைக்குப் பிறகு, விக்னேஷ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விக்னேஷிடமும், சம்பந்தப்பட்ட மாணவியிடமும் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

Sponsored


இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நெற்குன்றத்தைச் சேர்ந்த விக்னேஷின் அப்பா, கட்டட கான்ட்ராக்டராக உள்ளார்.  விக்னேஷ் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவருகிறார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம்தான் ப்ளஸ் ஒன் மாணவி, விக்னேஷுக்கு அறிமுகமாகியுள்ளார். அதன்பிறகு, மாணவியின் வீடு அமைந்துள்ள வளசரவாக்கத்தில் உள்ள பூங்காவுக்கு விக்னேஷ் வந்துள்ளார். அப்போதுதான் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இருவரும் பழகியுள்ளனர். இந்தச் சமயத்தில்தான்,  வீட்டில் யாரும் இல்லாதபோது விக்னேஷை வீட்டுக்குள் அழைத்துள்ளார் மாணவி. இருவரும் தனிமையில் இருந்துள்ளார். அதை வீடியோவாகவும் போட்டோவாகவும் எடுத்துள்ளார் விக்னேஷ். அதன்பிறகுதான், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

Sponsored


மாணவியின் பெயரைத் தன்னுடைய மார்பு, தோள் ஆகிய இடங்களில் பச்சை குத்தி வைத்துள்ளார் விக்னேஷ். அந்த அளவுக்கு மாணவியை நேசித்துள்ளார்.  மாணவியிடம் விசாரித்தபோது, அவரும் தவறு செய்ததை ஒத்துக்கொண்டார். அதுபோல, விக்னேஷும் வீடியோ எடுத்ததை ஒத்துக்கொண்டார். ஆனால், பணம் கேட்டு மிரட்டவில்லை என்று விக்னேஷ் எங்களிடம் தெரிவித்தார். மேலும் அவர், ` மாணவியைத் திருமணம் செய்ய வேண்டும் என்றுதான் அவரிடம் பழகினேன். ஆனால், வீடியோ விவகாரத்தில் அவசரப்பட்டுவிட்டேன். அவரை என்னால் மறக்க முடியாது' என்று கண்ணீர்மல்கக் கூறினார். அதுபோல, மாணவியிடம் தனியாக விசாரித்தபோது, அவரும் அதே தகவலை எங்களிடம் கூறினார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷை கைதுசெய்துள்ளோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மாணவியின் வீடியோவை விக்னேஷ், தன்னுடைய செல்போனிலிருந்து அழித்துவிட்டார். அந்த வீடியோவைத் திரும்ப எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விக்னேஷின் செல்போனில் மாணவியும் அவரும் சேர்ந்த எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்தன. இதனால், அவரின் செல்போனைப் பறிமுதல்செய்துள்ளோம். மாணவியின் அப்பா இன்ஜினீயர். மகள் செய்த காரியத்தால் வேதனையில் கூனிக்குறுகி இருந்தார். மாணவி விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.Trending Articles

Sponsored