சிலைக் கடத்தல் வழக்கில் கைதான இணை ஆணையர் கவிதா மருத்துவமனையில் அனுமதி!Sponsoredசிலைக் கடத்தல் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் இந்து அறநிலைத்துறை கூடுதல் இணை ஆணையர் கவிதா, உடல்நலக்குறைவு காரணமாக, சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உற்சவர் சோமாஸ்கந்தர் சிலை செய்தது தொடர்பாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்து அறநிலையத்துறை கூடுதல் இணை ஆணையர் கவிதாவை கடந்த சில தினங்களுக்கு முன் கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து, கூடுதல் ஆணையர் கவிதா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு, நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

கவிதாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், ஜாமீன்மனு மீது நாளை விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இந்த நிலையில், திருச்சி சிறையில் உள்ள கூடுதல் ஆணையர் கவிதா, சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவிதாவுக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கூடுதல் இணை ஆணையர் கவிதாவின் ஜாமீன்மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதி மன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored