தி.மு.க நிர்வாகிகள் தாக்குதல்! - பிரியாணி கடை ஓனரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்Sponsoredவிருகம்பாக்கத்தில், தி.மு.க தொண்டர்கள் சிலரால் தாக்கப்பட்ட பிரியாணி கடை உரிமையாளரை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். 


 

சென்னை, விருகம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் பிரியாணிக் கடை ஒன்றில், கடந்த 29-ம் தேதி இரவு 9 மணியளவில், 15 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது.  அவர்களிடம், பிரியாணி தீர்ந்துவிட்டதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். ஊழியர்களின் பேச்சை நம்பாத அந்தக் கும்பல், பிரியாணி வேண்டும் எனவும், அதுவும் இலவசமாக வேண்டும் என்றும் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

ஒருகட்டத்தில், கடைகாரர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில், கடை உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பிரியாணிக் கடையில்  தாக்குதலில் ஈடுபட்ட அந்தக் கும்பலில் சிலர், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீ போல பரவியது.  அதையடுத்து,  அவர்களை நேற்று,கட்சியிலிருந்து நீக்கி தி.மு.க தலைமைக்  கழகம் அறிவிப்பு  வெளியிட்டது. தாக்குதல் நடத்தியவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

`விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள்மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்’ என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

Sponsored 

Sponsored


இந்நிலையில், பாதிக்கப்பட்ட பிரியாணி கடை உரிமையாளரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் ஸ்டாலின். விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணிக் கடைக்கே நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துள்ளார் ஸ்டாலின். Trending Articles

Sponsored