பள்ளிகளில் புதிதாக 12 ஸ்கில் ட்ரெய்னிங் பாடங்கள்! - அமைச்சர் செங்கோட்டையன் உறுதிSponsored``வரும் கல்வியாண்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் புதிதாக 12 ஸ்கில் ட்ரெய்னிங் பாடங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன'' என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருப்பூர் ஜெய்வாபாய் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கருத்தரங்கை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்துப் பேசுகையில், ``இந்த மாத இறுதிக்குள், வணிகவியல் படிக்கும் மாணவர்களில் 25,000 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பட்டய கணக்கர் பயிற்சியை வழங்க தமிழக கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் சுமார் 25,000 மாணவர்களுக்கு சி.ஏ, நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் தொடங்கயிருக்கிறது. மேலும், அடுத்த 32 மாதங்களில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி மையங்களும் தமிழகத்தில் தொடங்கப்படவிருக்கின்றன. குறிப்பாக வரும் கல்வியாண்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் புதிதாக 12 ஸ்கில் ட்ரெய்னிங் பாடங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. அதன்மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ - மாணவிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழலை தமிழக கல்விப் பாடத்திட்டம் வாயிலாக உருவாக்கயிருக்கிறோம்'' என்றார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ``சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பிய திருமலைக் கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளி பெண் சமையலர் பாப்பாள் மீதான தீண்டாமை விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்தப் பிரச்னையில் தொடர்புள்ள அனைவருமே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றார். மேலும், கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை ஊழியர்களை, நிரந்தர ஊழியர்களாக நியமிப்பது தொடர்பாக பணியாளர் நலத்துறையுடன் தமிழக அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், எனவே, அதுகுறித்து கூடிய விரைவில் ஒரு நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored