பிரியாணி கடையில் தாக்குதல்..! 7 பேரைக் கைது செய்தது காவல்துறைSponsoredசென்னை விருகம்பாக்கத்திலுள்ள பிரியாணி கடையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 7 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை, விருகம்பாக்கத்திலுள்ள தனியார் உணவகத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற 15 பேர் கொண்ட கும்பல், கடையில் தகராறு செய்துள்ளது. பிரியாணி கேட்டு, கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்றுள்ளனர். அதனையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார். தாக்குதல் நடத்தியவர்களில் ஒரு சிலர், தி.மு.கவைச் சேர்ந்தவர்கள். இந்த விவகாரம் வெளிவந்ததையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டனர்.

Sponsored


இதற்கிடையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், ராம், கார்த்திக், கிஷோர், ருத்ரகுமார், கார்த்திக், சுரேஷ் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் தலைமறைவாகவுள்ள யுவராஜ், திவாகர், சதீஷ் ஆகியோரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored