`வீட்டிலேயே சுகப்பிரசவம் விளம்பரம்!’ - ஹீலர் பாஸ்கரைக் கைது செய்த கோவை போலீஸார்Sponsored​​​​

``வீட்டிலேயே பார்த்த பிரசவத்தால் திருப்பூரில் ஒரு பெண் உயிரிழந்துள்ள சூழலில், வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்காக கோவையில் இலவசப் பயிற்சி முகாம் நடத்த இருந்த ஹீலர் பாஸ்கரிடம் கோவை குனியமுத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."

``இனிய சுகப்பிரசவம் ஒரு வரம். மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேனிங், ரத்தப் பரிசோதனை என எதுவுமே எடுக்காமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது சுகப்பிரசவம் ஆகும். இதுவே சிறந்த வழிமுறை. வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் ஒருநாள் நிகழ்ச்சி ஆகஸ்ட் 26-ம் தேதி, கோவையில் உள்ள கோவைபுதூர் பகுதியில் நடக்க இருப்பதாகவும் அதில் சிறந்த ஆலோசகர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் 'நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையத்தின்' சார்பாக சமூகவலைதளங்களில் விளம்பரப்படுத்தப்படிருந்தது.

Sponsored


சமீபத்தில் சமூகவலைதளத்தைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயற்சி செய்ததால் திருப்பூரில் கிருத்திகா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தது தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் 'நிஷ்டை' அமைப்பினர் வெளியிட்ட  இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பயிற்சியைத் தடைசெய்யக்கோரி  இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பில் கோவை கலெக்டரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை நடத்த இருந்த ஹீலர் பாஸ்கரிடம் கோவை குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணைக்குப் பின்னர் அவரை மோசடி புகாரில் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். 

Also Read: 'ஹீலர்' பாஸ்கர் கைது ஏன்? - இன்ஸ்பெக்டர் விளக்கம்

Sponsored
Trending Articles

Sponsored