சிலைக் கடத்தல் வழக்கும்... சிக்கல்களும்!Sponsoredமிழகக் கோயில்களில் உள்ள மதிப்புமிக்க சிலைகள் பலவும், சிலை கடத்தல் கும்பல்களினால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் இந்தக் கடத்தல் சம்பவங்களினால், ஆயிரக்கணக்கிலான சிலைகள் காணாமல் போயுள்ளன. இந்நிலையில், சிலைக் கடத்தல் தொடர்பாக ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தீவிர புலன் விசாரணை செய்து, கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்ததோடு, காணாமல் போன சிலைகளையும் மீட்டுக் கொண்டுவந்தார்.

இந்நிலையில், தமிழக அரசுக்கும்  பொன் மாணிக்கவேலுவுக்கும் இடையே மறைமுக மோதல் ஆரம்பித்தது. இதையடுத்து அவரை ரயில்வே காவல்துறைக்குப் பணியிடமாற்றம் செய்தது தமிழக அரசு. ஆனாலும், உயர்நீதிமன்றமோ, 'அனைத்து சிலைக் கடத்தல் வழக்குகளையும் ஐ.ஜி பொன் மாணிக்கவேல்தான் விசாரிக்கவேண்டும். மேலும் அவருக்குத் தேவையான அதிகாரிகளை தமிழக அரசு தர வேண்டும். மேலும், கும்பகோணத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் விசாரிக்கவேண்டும்' என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உச்சநீதிமன்றமோ, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, பொன் மாணிக்கவேலின் பணியையும் பாராட்டியது. 

Sponsored


இதையடுத்து, பொன் மாணிக்கவேலும் தன் பணியில் பிஸியானார். ஆனாலும், தமிழக அரசு தொடர்ந்து துறை ரீதியாக தனக்குப் பல்வேறு சிரமங்களை கொடுத்துவருவதாக, நீதிமன்ற வழக்கு விசாரணைகளின்போது தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும்விதமாக, கடந்த மாதம் சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''துறை ரீதியாக பொன் மாணிக்கவேல் கேட்ட வசதிகள் அனைத்தும் அவருக்கு செய்துதரப்பட்டுள்ளன. 320 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 35 லட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன'' என்றார்.

Sponsored


இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், ''சிலைக் கடத்தல் தொடர்பாக ஐ.ஜி பொன் மாணிக்கவேல் நடத்திவரும் விசாரணையில் அரசுக்கு நம்பிக்கை இல்லை. எனவே தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது'' எனத் தெரிவித்தார். மேலும், ''சிலைக்கடத்தல் வழக்குகளில் பொன் மாணிக்கவேல் தலைமையிலான பணிகள் சிறப்பாக இல்லை. கடந்த ஓராண்டாக இவ்வழக்கு விசாரணையில் என்ன நடக்கிறது என்பதைக்கூட அறிக்கையாக அரசுக்கு அவர் தெரியப்படுத்தவில்லை. உயர் அதிகாரிகளுக்கும் அவர் மதிப்பளிப்பது இல்லை'' என சரமாரியாக குற்றச்சாட்டுகளையும் சுமத்தியது. இதனைக்கேட்ட நீதிபதிகள், ''தமிழகக் காவல்துறையின் செயல்பாடுகள் மீது அரசுக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா?'' என்று கேள்வி எழுப்பினர். மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கும் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். 

சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரும் தமிழக அரசின் நிலைப்பாடு, பொதுத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மனுதாரர்களில் ஒருவரான யானை ராஜேந்திரன், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்துப் பேசும்போது, ''பொன் மாணிக்கவேல் விசாரணைக்குப் பிறகுதான், சிலைக் கடத்தல் வழக்குகளில் நல்லதொரு தீர்வு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. தவறு செய்த அறநிலையத்துறை அதிகாரிகளும் அடுத்தடுத்து கைதாகி வருகிறார்கள். 

மேலும், காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும், அரசியல் தொடர்புடன் உயர் பொறுப்புகளில் உள்ளோருக்கும் இந்தச் சிலை கடத்தல் விவகாரத்தில் சம்பந்தம் இருக்கிறது. எனவே தாங்கள் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில்தான், கொள்கை முடிவு எடுத்து வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றத் துடிக்கிறார்கள்'' என்று பொறுமியவர் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டால் அதை எதிர்த்தும் வழக்குத் தாக்கல் செய்வேன் என்கிறார்.

மீண்டும் இவ்வழக்கு வருகிற 8-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் சூழலில், சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது தமிழக அரசு!Trending Articles

Sponsored