`குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.6,020-க்கு விலை போன பருத்தி!’ - மகிழ்ச்சியில் விவசாயிகள்Sponsoredகும்பகோணத்தில் நடைபெற்ற ஏலத்தில் பருத்தி குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.6,020-க்கு விலைபோனது, அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

கும்பகோணத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிக விலை கிடைத்ததால் இப்பகுதியில் உள்ள பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தங்களது உழைப்புக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற பலன் கிடைத்திருப்பதாக உற்சாகத்தோடு பேசுகிறார்கள். பொதுவாக, விவசாயிகள் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு தங்களது விளைபொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். விதைப்பு செய்து பல்வேறு நிலைகளைக் கடந்து, அறுவடை செய்யும் வரை வெற்றிகரமான விளைச்சலுக்கு உத்தரவாதம் இல்லை. அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக விளைச்சல் கிடைத்தாலும் விவசாயிகள் நிம்மதி அடைந்துவிட முடியாது. தங்களது விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்குமா என்ற மன உளைச்சலுடன்தான் இருப்பார்கள். அவ்வப்போது ஏற்படும் விலை சரிவால் பல நேரங்களில் நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள். குறிப்பாக, பருத்தியில் இதுபோன்ற பின்னடைவுகள் இன்னும் அதிகம். நாளுக்கு நாள் விலை மாறிக்கொண்டே இருக்கும்.

Sponsored


இந்நிலையில்தான் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலம் விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. `ஒரு குவிண்டால் பருத்திக்கு 5,500 ரூபாய்க்கு மேல் விலை கிடைப்பது மிகவும் அபூர்வம். நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்ச விலையாக 6,219 ரூபாயும் குறைந்தபட்ச விலையாக 5,730 ரூபாயும் விலை கிடைத்துள்ளது. சராசரி விலையாக 6,020 ரூபாய் விலை கிடைத்துள்ளது' என ஏலத்தில் கலந்துகொண்ட  விவசாயிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள். இவர்கள் கொண்டு வந்திருந்த 1,800 குவிண்டால் பருத்தி இந்த ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.    

Sponsored
Trending Articles

Sponsored