''களையெடுக்கும் சூரப்பா...!'' - அம்பலமாகும் அண்ணா பல்கலைக்கழகத் தில்லுமுல்லுகள்!லகப்புகழ் பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்திலும், டெண்டர்கள் விடுவதிலும் முறைகேடுகள் நடக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் 'அரசியல்' உள்ளது என்று சொல்லப்பட்டாலும், துணைவேந்தர் வீடுகள், அலுவலகங்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான ஆவணங்கள், தங்கம், வைர நகைகள் கைப்பற்றப்பட்டிருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. என மாறி, மாறி ஆட்சிகள் ஏற்பட்ட போது எழுந்த புகார்களை விட, கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டுவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த, 'ராஜாராம்' மீதுதான் மலைபோல் புகார்கள் குவிந்தன. 

Sponsored


இதையடுத்து, ராஜாராம் பதவியில் இருந்துபோது நடந்த முறைகேடுகள் குறித்து, தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னை, தேனி ஆகிய பகுதிகளில் ராஜாராமுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 20 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது வங்கிக் கணக்கையும் போலீஸார் ஆய்வு செய்தனர். 2 கிலோ தங்க நகைகள், 2 கிலோ தங்க நாணயங்கள், தங்க பிஸ்கட்டுகள் உள்ளிட்டவை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ராஜாராமின் மனைவி பெயரில் புதுச்சேரியில் பதிவு செய்து தமிழகத்தில் 22 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதும் ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. அந்த பஸ்களை இயக்க, சென்னை கோயம்பேட்டில் இடம் வாங்கி இருப்பதையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் உறுதி செய்தனர்.

Sponsored


ராஜாராம் மீதான ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இப்போது, மறுமதிப்பீடு ஊழல் அம்பலமாகி உள்ளது அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. லஞ்ச ஒழிப்புப்  போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பலதா பதிவு செய்துள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல், சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கூட்டுச்சதி உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழும், லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவுகளின் கீழும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்த பேராசிரியை உமா, மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.விஜயகுமார் உள்பட 10 பேராசிரியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கும், புரோக்கர்களுக்கும் பாலமாகச் செயல்பட்ட விசு என்கிற விஸ்வாமித்ரன் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தேடி வருகிறார்கள். இப்போது சிக்கி இருக்கும் மறுமதிப்பீடு டீமை நியமித்ததே, துணை வேந்தராக இருந்த ராஜாராம் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, அவரிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயரும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை பட்டியலில் உள்ளது. 

Sponsored


துணைவேந்தராக நியமிக்கப்பட்டபோது, பல சர்ச்சைகளுக்கு ஆளான சூரப்பா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகளால், அண்ணா பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த முறைகேடு தற்போது அம்பலமாகி உள்ளது. பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் நியமனத்திலும் நடந்துள்ள ஊழல்கள் பற்றி ரகசிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளார் சூரப்பா. மேலும், அவுட்சோர்ஸ் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு செய்யப்பட்டு வரும் அனைத்துப் பணிகளையும், அவற்றின் தேவைகளையும் மறுஆய்வு செய்ய துணைவேந்தர்  உத்தரவிட்டுள்ளாராம். அதேநேரம், மதிப்பெண் மறுமதிப்பீடு புகாரில் சிக்கி இருக்கும் மாணவர்களின் சான்றிதழ்களை என்ன செய்வது என்ற சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அந்தச் சான்றிதழ்களை ரத்து செய்வதா? அவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதா? படிப்பை முடித்து பட்டத்தையும் வாங்கியவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்று தீவிர ஆலோசனையில் அண்ணா பல்கலைக்கழக உயர்மட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. Trending Articles

Sponsored