கோவை மலை கிராமத்தில் நடுவழியில் ப்ரேக் டவுன் ஆன அரசுப் பேருந்து..!Sponsoredகோவை மலை கிராமத்தில் அரசுப் பேருந்து நடுவழியில் ப்ரேக்டவுன் ஆகி நின்றது.

கோவை மாவட்டம், ஆனைகட்டி பகுதியைச் சுற்றி ஏராளமான பழங்குடி கிராமங்கள் உள்ளன. மலைப்பிரேதசம் என்பதால் போக்குவரத்துக்கு என்பது இங்கு திண்டாட்டம்தான். இந்த வழித்தடத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலும் தரம் இல்லாத அரசுப் பேருந்துகள்தான் இயக்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Sponsored


வியாழக்கிழமை, மதியம் கோவை – ஆனைகட்டிக்கு சுமார் 40 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. முதலில் ஆலமர மேடு பகுதியில் நின்ற பேருந்தை, டிரைவர் மீண்டும் ஸ்டார்ட் செய்து இயக்கியுள்ளார். மூங்கில் பள்ளம், நடு வனம் பகுதியில் பேருந்து மீண்டும் நின்றது. குறிப்பாக, நடு வனம் பகுதியில் நின்ற பேருந்தை, டிரைவரால் மீண்டும் ஸ்டார்ட் செய்ய முடியவில்லை.

Sponsored


இதுகுறித்து அந்தப் பேருந்தில் பயணித்தவர்கள் கூறுகையில், “யானைகள் மற்றும் வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் பேருந்து ப்ரேக்டவுன் ஆகிவிட்டது. இதையடுத்து, சிறிது நேரம் கழித்து அங்கு வந்த தனியார் பேருந்தில் பயணிகள் சென்றனர். எங்கள் பகுதியில் தரமில்லாத அரசுப் பேருந்துகள்தான் இயக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் என அரசுப் பேருந்தை நம்பி ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால், நாங்கள் நடுவழியில் நிற்பது தொடர் கதையாகிவிட்டது“ என்றனர்.

இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை பொது மேலாளர் கோவிந்தராஜிடம் கேட்டபோது, “அப்படியா… அந்த மக்கள் யாரும் எங்கக்கிட்ட புகார் கொடுக்கலையே.. அங்க இப்படி ஒரு பிரச்னை இருப்பதே நீங்க சொல்லித்தான் கேள்விப்படறேன். சரி என்னனு விசாரிக்கறேன்” என்றார்.  Trending Articles

Sponsored