செக் குடியரசு மணமகனுக்கும், விருத்தாசல பெண்ணுக்கும் திருமணம்..! இந்து முறைப்படி நடந்ததுSponsoredவிருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் தமிழ் பெண்ணுக்கும், செக் குடியரசு மணமகனுக்கும் இந்து முறைப்படி காதல் திருமணம் நடந்தது.  

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த குணசேகரன், மணிமேகலை தம்பதியினரின் மகள் சாருலதா (35). இவர் செக் குடியரசு நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அங்கு பணிபுரிந்த போது அதே நாட்டைச் சேர்ந்த லூகாஸ் (40) என்பவரை காதலித்து வந்துள்ளார். இது குறித்து சாருலதா தனது பெற்றோரிடம் கூறி அவர்களின் சம்மதம் பெற்றார். இதேபோல் லூகாசும் தனது பெற்றோரிடம் கூறி சம்மதம் பெற்றுள்ளார். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு செக்குடியரசு நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில்  சாருலதாவின் சொந்த ஊரான கடலூர் மாவட்டத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். 

Sponsored


இது குறித்து லூகாஸ் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் கூறி அவர்களின் சம்மதத்தையும் பெற்றுள்ளார். அதன்படி, செக் குடியரசு நாட்டில் இருந்து மாப்பிள்ளை லூகாஸ் மற்றும் அவரது உறவினர்களுடன்  இந்தியா வந்தனர். பின்னர் இரு குடும்பத்தினரும் விருத்தாசலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோயிலில் இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். நிச்சசயித்தபடி, லூகாஸ் மற்றும் சாருலதா இருவரது குடும்பத்தினருடன் நேற்று விருத்தாசலம் அருகே உள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் இந்து முறைப்படி ஐயர் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளத்துடன்  திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

Sponsored
Trending Articles

Sponsored