கருணாநிதிக்கு ஊன்றுகோல் கொடுக்க ஊன்றுகோலுடன் வந்த 85 வயது முதியவர்!Sponsored
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஊன்றுகோல் கொடுக்க, ஆவடி அண்ணனூரைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஊன்றுகோல் உதவியுடன் ஆழ்வார்பேட்டைக்கு வந்தார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவமனை வாசல் முன் ஏராளமான தொண்டர்கள், `எழுந்துவா தலைவா' என்று கோஷமிட்டபடி காத்திருக்கின்றனர். கருணாநிதியின் உடல் நலத்தில் முன்னேற்றம்  ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெட்டில் படுத்திருந்த கருணாநிதி, அரை மணி நேரம் நாற்காலியில் அமர்ந்திருந்ததாக மருத்துவர்கள் கூறினர். 

Sponsored


இந்த நிலையில், கருணாநிதிக்காக பலர் மொட்டை போடுதல், தேங்காய் உடைத்தல் என  பிரார்த்தனைகள் செய்துவருகின்றனர். பட்டாபிராமைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கருணாநிதி பூரண நலம்பெற வேண்டி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார். தொடர்ந்து, ஆவடி அண்ணனூரைச் சேர்ந்த சங்கரன் என்ற 85 வயது முதியவர், இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரின் கையில் இரண்டு ஊன்றுகோல்கள் இருந்தன. ஒன்றை சங்கரன் பயன்படுத்தினார். இன்னொன்று புத்தம் புதிதாக இருந்தது. அவரிடம் பேசினோம். ``இந்த ஊன்றுகோல், கருணாநிதிக்காக நான் வாங்கிக்கொண்டு வந்துள்ளேன். விரைவில், அவர் ஊன்றுகோல் உதவியோடு எழுந்து நடப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைபெற்றபோது, விபூதி பிரசாதம் கொண்டுவந்தேன். நான் எந்தக் கட்சியையும் சாராதவன்'' என்றார். 

Sponsored


கருணாநிதிக்கு ஊன்றுகோலைப் பரிசாக அளிக்க ஆழ்வார்பேட்டை மருத்துவமனை அருகே நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் சங்கரன். இதுகுறித்த தகவல்கள் மருத்துவமனையில் உள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள கட்சியினர் தெரிவித்தனர். Trending Articles

Sponsored