சிலைக் கடத்தல் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் ஏன்? ஜெயக்குமாரின் அடடே பதில்Sponsored``சிலைக் கடத்தல் விவகாரம் சர்வதேச அளவில் இருப்பதால்தான், சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது'' என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 213-வது பிறந்தநாள், இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நிலையில், சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.  அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் சிலைக் கடத்தல் விவகாரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. 

Sponsored


அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், `'சிலைக் கடத்தல் என்பது சர்வதேச அளவில் உள்ள பிரச்னையாகும். மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையும்கூட. தமிழக போலீஸார் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானவர்கள்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், சிலைக் கடத்தல் விவகாரம் சர்வதேச பிரச்னை. இதனால், சி.பி.ஐ உதவியை அணுகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை சி.பி.ஐ-க்கு மாற்றவில்லை என்றால் ஏன் மாற்றவில்லை என்பார்கள்; மாற்றினால், ஏன் மாற்றப்பட்டது என்ற கேள்வியை முன்வைப்பார்கள். அதனால், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னிறுத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் அரசின் ஒரே குறிக்கோள். எனவே, சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றியதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை'' என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored