`மிகப் பெரிய நெட் வொர்க் செயல்படுகிறது’ - அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா அதிர்ச்சிஅண்ணா பல்கலைக்கழகத் தேர்வுத்தாள் மறுக்கூட்டல் விவகாரத்தில் பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும் இதன் பின் பெரிய நெட் வொர்க் செயல்படுவதாக தான் கருதுவதாகவும் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். 

Sponsored


அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகளில் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். பேராசிரியர்கள், மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்ச்சியடைய செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருந்த தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜி.வி.உமா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, விடைத்தாள்கள் மறுக்கூட்டல் பணி நடைபெற்ற திண்டிவனம் கல்லூரியின் முதல்வர் விஜயகுமாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Sponsored


இந்தநிலையில் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, “தேர்வுத் தாள் மறுக்கூட்டல் முறைகேடு விவகாரத்தில் எத்தனை பேராசிரியர்களுக்கு தொடர்பு உள்ளது என முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், இதன் பின் பெரிய நெட் வொர்க் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. பேராசிரியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீதான விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும். தற்போது அனைவரின் முழு ஒத்துழைப்புடன் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழலுக்கு இடமளிக்க முடியாது. அனைவரும் நியாயம், நேர்மை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரின் மனநிலையையும் மாற்றுவது பெரும் சவாலாக உள்ளது. முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

Sponsored
Trending Articles

Sponsored