மேட்டூரில் ஆடிப்பெருக்கு! - காவிரியில் நீராடி பொதுமக்கள் குதூகலம்



ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று மேட்டூர் காவிரி ஆற்றில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவிரி ஆற்றில் நீராடி குதூகளித்து வருகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமாகவும், காவிரி ஆற்றில் அதிக நீர் போய்க் கொண்டிருப்பதாலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் குளிப்பதற்கு அனுமதித்திருக்கிறார்கள். அனுமதிக்காத பகுதிகளில் யாரும் ஆற்றுக்குள் இறங்கக் கூடாது என்று ஸ்பீக்கரில் அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட ஆற்றுப் பகுதிகளில் கட்டைகள் நடப்பட்டு ஆற்றுக்குள் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஏதாவது ஆபத்து நேர்ந்தால் மீட்பு நடவடிக்கை எடுக்கவும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

Sponsored


Sponsored


காவிரி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த பன்னீர்செல்வம், ``நாங்க தருமபுரியிலிருந்து வந்திருக்கிறோம். ஆடி 18 என்பது பாரதப் போர் முடிந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் ஆற்றில் குளித்தால் நமக்குப் பிடித்த தோஷங்கள் நீங்கி புதிய வாழ்க்கை பிறந்ததாகவும் எண்ணப்படுகிறது. அதனால் நாங்கள் ஒவ்வொரு ஆடி 18 தினத்தின் போதும் காவிரி ஆற்றுக்கு வந்து நீராடிச் செல்வது வழக்கம்.
இந்த வருடம் எங்க குடும்பம், எங்க அண்ணன் குடும்பம், குழந்தைகளோடு சேர்த்து 8 பேர் வந்திருக்கிறோம். காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. குளிப்பதற்குப் பாதுகாப்பான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருக்கிறார்கள். இந்த நாள் எங்களுக்கு ரொம்ப இனிமையான நாளாக இருக்கிறது'' என்றார்.

Sponsored


பொங்கல் வைத்துக்கொண்டிருந்த அலமேலு, ``நாங்க சேலம் அயோத்தியாப்பட்டணத்திலிருந்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு வருஷமும் ஆடி 18 அன்று மேட்டூருக்கு வந்து காவிரியில் குளித்துவிட்டு முனியப்பனுக்கு சேவல் அறுத்து பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த வருடமும் காலையிலேயே வந்து குளித்துவிட்டு முனியப்பனுக்கு சேவல் அறுத்து பொங்கல் வச்சுட்டு இருக்கிறோம். பசங்க, பொண்ணுங்க எல்லோரும் ஆற்றில் குளிக்கப் போயிட்டாங்க. அவர்கள் வருவதற்குள் பொங்கல் வைத்து குழம்பு வைத்துவிட வேண்டும். அவுங்க வந்ததும் சாப்பிட்டு விட்டு பூங்காவுக்குள் போயிட்டு ஜாலியா  பொழுதைக் கழித்துவிட்டு மாலை வீட்டுக்கு செல்வோம்'' என்றார்.



Trending Articles

Sponsored