பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை! கலெக்டரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவித்திருந்தார். ஆனால், உத்தரவு அமலுக்கு வந்து மூன்று நாள்கள் கடந்த நிலையில், அரசு அதிகாரிகள் யாரும் அதைச் சட்டை செய்யாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டக் கலெக்டர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், 'கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் ஆகஸ்ட் 1-ம் தேதி பிளாஸ்டிக் தாள்கள், மேசை விரிப்புகள், தெர்மாகூல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், குவளைகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், தெர்மாகூல் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் என எந்தப் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது. இவற்றுக்கு மாற்றாக வாழை இலை, பாக்கு மட்டைத் தட்டு, தாமரை இலைகள், காகிதத் தாள்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிக் குவளைகள், காகித உறிஞ்சு குழல், துணிப் பைகள், காகித மற்றும் சணல் பைகள், துணி மற்றும் காகிதக் கொடிகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

அதோடு, 'மக்களை முதலில் அறிவுறுத்தாமல் நாமே முதலில் முன்னுதாரணமாகச் செயல்படுவோம். பிளாஸ்டிக் கவர் கொண்டு வரும் மக்களிடம் அதை வாங்குவதோடு, அவர்களிடம் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும்' என்றும் அறிவுறுத்தி இருந்தார். ஆனால், அவர் அறிவிப்பு செய்து மூன்று நாள்கள் கடந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவாயிலில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் குப்பை கூடை ஆகியவை இன்று அகற்றப்படாமல் இருக்கிறது. வளாகத்தில் பாலீத்தின் பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அதோடு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளே உள்ள கரூர் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே  பிளாஸ்டிக் குடத்தில் பொதுமக்கள் குடிக்க தண்ணீர்  வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே பிளாஸ்டிக் குவளைகளும் வைக்கப்பட்டிருந்தன. இதைத்தவிர, வேளாண்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை அலுவலகங்கள் அமைத்துள்ள மாடிகளில் பல இடங்களிலும் நீண்ட நாள்களாக அகற்றப்படாத குப்பைகள் முடுக்குகளில் குவிந்து கிடக்கின்றன. இப்படி, கரூர் மாவட்ட ஆட்சியர் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாடு கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை என்ற உத்தரவை பல அரசு துறை அதிகாரிகள் நடைமுறைபடுத்ததாது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


Sponsored


இதுபற்றி, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், "மாவட்ட கலெக்டர் சொல்லியே மாவட்ட அதிகாரிகள் யாரும் கேட்கலை. பிளாஸ்டிக்கை ஒழிக்க மெனக்கடலை. அப்போ முதல்வர் உத்தரவுபடி, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுக்க எப்படி பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுப்பார்கள். ஊருக்கு மட்டுமே அரசும் அதிகாரிகளும் உபதேசம் செய்கிறார்கள்" என்று சாடினார்கள்.

Sponsored
Trending Articles

Sponsored