விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை கேட்டு வழக்கு! - கமலுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்



விஸ்வரூபம்-2 படத்தை வெளியிடத் தடை விதிக்க கோரும் வழக்கில், நடிகர் கமல்ஹாசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Sponsored


நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `விஸ்வரூபம்.’ இந்தப் படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி, இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்குவரும் என அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் இந்தப் படத்துக்கு தடை விதிக்கக்கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், `2008-ம் ஆண்டு `மர்மயோகி’ என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கத் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக 6.90 கோடி ரூபாயும் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. ஆனால், இந்தப் பணத்தைக் கொண்டு `மர்மயோகி’ படத்தைத் தயாரிக்காமல் `உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த 6.90 கோடியைக் கேட்டு சாய்மீரா நிறுவனம் சார்பில், ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. மர்மயோகி படத்துக்கு கொடுத்த சம்பளம் ரூபாய் 4 கோடியை வட்டியுடன் சேர்த்து 5.44 கோடி ரூபாய் கொடுக்காமல் விஸ்வரூபம் -2 படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவருடைய தயாரிப்பு நிறுவனம், வருகிற 6-ம் தேதிக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored