`தி.மு.க தலைவர் கருணாநிதியைத் தொலைவிலிருந்து பார்த்தேன்’ - தேவகவுடா பேட்டி!



காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.

Sponsored


உடல்நலிவு காரணமாகத் தி.மு.க தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

Sponsored


Sponsored


அதேபோல அண்டை மாநில முதல்வர்களும் தொலைபேசி வாயிலாகவும் நேரில் வருகை தந்தும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பதற்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா சென்னை வந்தடைந்தார். பின்னர், காவேரி மருத்துவமனைக்குச் சென்ற அவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். தொடர்ந்து தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், `கருணாநிதியைத் தூரத்திலிருந்து பார்த்தேன். அவர் நூற்றாண்டு கடந்து வாழ்வார்' எனத் தெரிவித்தார். கடந்த சில நாள்களுக்கு முன் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, காவேரி மருத்துவமனைக்கு வந்து தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார். அவரைத் தொடர்ந்து நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


 



Trending Articles

Sponsored