சிலை கடத்தல் தொடர்பான எந்த வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கும்? - தமிழக அரசு பதில்!Sponsoredசிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்தும் எனவும் மற்ற வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கும் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.


 சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள், நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமான ஆவணங்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்திருந்த நிலையில், சிலைகடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றம், சிறப்புக் குழுவை நியமித்துள்ளது. இந்நிலையில், வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற முடியுமா என அரசுத் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Sponsored


Sponsored


மேலும் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவின் நிலை குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்தும் எனவும் மற்ற வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கும் எனவும் விளக்கமளித்தார். தொடர்ந்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவுகளையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டினார். மேலும், சிலை கடத்தல் வழக்குகளைத் தனிப்பிரிவு விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றம் சென்றபோது உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தற்போது தமிழக அரசு, திடீரென சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றுவது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், அனைத்து உத்தரவுகளும் அமல்படுத்தப்படுகின்றன எனப் பதிலளித்தார். இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி மகாதேவன், 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.Trending Articles

Sponsored