`நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் போட்டி' - கமல்ஹாசன்!Sponsoredவருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிச்சயம் போட்டியிடும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன் அதே நேரத்தில் தனது `விஸ்வரூபம் 2' படத்தின் புரோமோஷன் வேலைகளிலும் பிசியாகி உள்ளார். அந்தவகையில், சல்மான் கானின் `தஸ் கா தம்’, தெலுங்கு பிக் பாஸ் என படத்தை மும்மொழிகளும் ரிலீஸ் செய்யும் வேளைகளில் பிசியாகி இருக்கிறார். இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசனிடம் சிலைக் கடத்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், ``தமிழக அரசு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி இருக்கிறது. 

Sponsored


சி.பி.ஐ வழக்கு மாற்றப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது. தமிழக அரசுக்கு வெளிப்படைத் தன்மை இல்லை. அதனாலே லோக் ஆயுக்தாவை நீர்த்துப் போகச் செய்துள்ளனர். இதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்" என்றவரிடம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கேள்விக்குப் பதிலளித்தார். அதில், ``வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிச்சயம் போட்டியிடும். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். மேலும் `விஸ்வரூபம் 2' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியிடப்படும்" என்றும் தெரிவித்தார். 

Sponsored
Trending Articles

Sponsored