தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது - அமைச்சர் ஜெயக்குமார் பதில்Sponsoredஅரசு முறையாக செயல்பட்டு வருவதால்தான் தவறு இழைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று சென்னையிலிருந்து புறப்பட்டார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், `குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது உரிய நடவடிக்கை அரசு எடுக்கவில்லை என்றால்தான் குற்றத்துக்கு அரசு துணைபோகிறது என்றுகூற முடியும். அரசின் செயல்பாடுகள் சரியாக இருப்பதால்தான் தவறு இழைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அரசு சரியாக செயல்படவில்லை என்று சொல்ல முடியாது. அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உமாவை பணியிடை நீக்கம் செய்து, நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்' என்றவரிடம், 

Sponsored


நீதிபதி ரகுபதி ஆணையம் தலைமையில் நடைபெற்று வந்த விசாரணையை நிறுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், `ரகுபதி ஆணையம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும். சிலைக் கடத்தல் விவகாரம் வெளிமாநிலங்கள் மற்றும் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது' என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored