மளிகைக் கடைக்காரருக்கு அதிர்ச்சிக் கொடுத்த கொள்ளையன்!Sponsoredகோவையில்  மளிகைக் கடையின் மேற்கூரையை உடைத்து ரூ. 25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை கணுவாய் அருகே தங்கராஜா என்பவருக்குச் சொந்தமான டி.எஸ் என்ற மளிகைக் கடை இயங்கி வருகிறது. இன்று அதிகாலை கடையைத் திறந்த உரிமையாளர் தங்கராஜா, மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சியைப் பார்த்தபோதுதான் விஷயம் தெரிந்தது.

Sponsored


அந்தக் கடையில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு 2 மணி அளவில், மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். இதையடுத்து, அந்த நபர், நேராக கல்லாப் பெட்டிக்குச் சென்று, அங்கிருந்த 25,000 ரூபாய் ரொக்கத்தைக் கொள்ளையடித்துள்ளார்.

Sponsored


இதுகுறித்து தங்கராஜா கூறுகையில், ``ஒரு வருஷமா கடை இயங்கி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு, கடையின் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டது. நாங்கள் உடனடியாக அங்கு வந்துவிட்டோம். இதனால், கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். எங்களது கடையைத் தொடர்ந்து கண்காணித்து, திட்டமிட்டுத்தான் கொள்ளையடித்துள்ளனர், இதுதொடர்பாக வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்” என்றார்.Trending Articles

Sponsored