ஐஸ்வர்யா, ஜெயலலிதா, கமல்... பிக்பாஸ்-2 மீது வழக்கு ஏன்?Sponsoredடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் - 2' நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் - என சென்னை வழக்கறிஞர் ஒருவர், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் - 1 நிகழ்ச்சி முடிவுற்று தற்போது பிக் பாஸ் சீசன் - 2 கடந்த 46 நாள்களாக ஒளிப்பரப்பாகிவருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி அனைவரையும் முகம் சுளிக்கவைக்கும் விதமாக, மிகவும் அருவருக்கத்தக்க நிலையில் இருப்பதாகப் பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், 'மக்களுக்காகக் களப்பணி ஆற்றாமல், வெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமே நடிகர் கமல்ஹாசன் வெற்று அரசியல் செய்கிறார்' என்றும் சமூக வலைதளங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், நடிகர் கமல்ஹாசனைப் பற்றியும் பொதுமக்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லூயிசாள் ரமேஷ் என்பவர் கடந்த 2-8-2018 அன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Sponsored


இதுபற்றி வழக்கறிஞர் லூயிசாள் ரமேஷ் நம்மிடம் பேசியபோது, ``சமீப காலமாக தமிழகத்தில் புதுப்புதுக் கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்படிக் கட்சி ஆரம்பிப்பவர்கள் மக்களுக்கு தாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை எடுத்துச்சொல்லி, ஆட்சிக்கு வர முயற்சி செய்யலாம். அதை விடுத்து இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்களைப் பற்றிக் குறை கூறியும் அவர்களை மிகவும் கேவலமாகச் சித்திரித்தும் ஆட்சிக்கு வர முயற்சி செய்வது மிகவும் கேவலமான செயல். அப்படி ஒரு செயலைத்தான் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் செய்துவருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் -2 நிகழ்ச்சியைக் கமல், தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியாய் தொகுத்து வழங்குவது மட்டுமல்ல... இந்த நிகழ்ச்சியையே அவருடைய அரசியல் களமாகப் பயன்படுத்தியும் வருகிறார். இந்த நிகழ்ச்சியில், போட்டி விதிமுறைகளின்படி ஒரு நடிகை தற்போது சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அந்த நடிகை மிகவும் கேவலமான செய்கைகளைச் செய்வது மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டது. 

Sponsored


ஒரு நடிகரின் மீது குப்பை மற்றும் சமையலறைக் கழிவுகளைக் கொட்டச் சொல்லி உத்தரவிடுகிறார் இந்த சர்வாதிகார நடிகை. இதன் அடிப்படையில் அவரின் உதவியாளர்களும் சம்பந்தப்பட்ட நபரின் மீது குப்பையைக் கொட்டுகிறார்கள். அப்போது மற்றொரு நடிகை 'இதற்கு முன் தமிழகத்தில் சர்வாதிகாரியாக ஆட்சி செய்தவர்களின் நிலைமை கடைசியில் என்ன ஆனது தெரியுமா?' என்று சொல்கிறார். இது அரசியல் அநாகரிகம். இதற்கு முன் இங்கு ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. கமல்ஹாசன் தனது கட்சியை வளர்க்க தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்துகிறார். அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதாவைத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சர்வாதிகாரியாக சித்திரித்து ஒளிபரப்புகிறது. இது அரசியல் அநாகரிகமான செயல் மட்டுமல்லாமல், மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. அதுமட்டுமல்லாமல், இந்த நிகழ்ச்சியில், சர்வ சாதாரணமாகக் கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றனர். இரட்டை அர்த்த செயல்களிலும் நடிகர் - நடிகைகள் ஈடுபடுகின்றனர். முதல் நாள் நடந்த நிகழ்வுகளை எடிட் செய்துதான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அப்படியிருக்க தேவையில்லாத வசனங்களை, செயல்களை நீக்கி ஒளிபரப்பலாம். இந்த நிகழ்ச்சியை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளும் பார்த்து வருகிறார்கள் என்பது நிகழ்ச்சி நடத்துவோருக்கும், கமல்ஹாசனுக்கும் தெரியாதா என்ன? அதனால், அரசியல் நாகரிகம் கருதியும், குழந்தைகள் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும்" எனக் கூறினார்.

 'பிக் பாஸ் நிகழ்ச்சியை எனது அரசியல் களமாகப் பயன்படுத்தி வருகிறேன்' என நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். சமூகத்தின் நலனுக்காகப் பாடுபடப்போவதாகவும் முன்னரே அறிவித்திருக்கிறார். அப்படியானால், இந்த நிகழ்ச்சியானது அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒளிபரப்பப்படுவதும் அவரின் அனுமதியோடுதான் நடந்து வருகிறது. சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவராகக் காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன், குழந்தைகள் உள்ளிட்ட எண்ணற்றப் பொதுமக்கள் பார்த்துவரும் இந்நிகழ்ச்சியில் இப்படி அநாகரிகங்களை அரங்கேற்றலாமா?" என்று கேள்வி விடுக்கின்றனர் சமூக வலைதளவாசிகள்.Trending Articles

Sponsored