வனப்பகுதியைக் கண்காணிக்க வந்துவிட்டது புதிய செயலி! முதுமலை புலிகள் காப்பகத்தில் அறிமுகம்Sponsoredநீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுமலை, கார்குடி, தெப்பக்காடு, நெலாக்கோட்டை, மசினகுடி என 5 வனச்சரகங்கள் உள்ளன. காட்டு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உட்பட பல்வேறு வனவிலங்குகளின் வசிப்பிடமாக இருக்கும் இந்த வனப்பகுதியை கண்காணிக்கவும், சமூக விரோதிகள் ஊடுருவலைத் தடுக்கவும் வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் தங்கி வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், தினம்தாேறும் வனப்பகுதிக்குள் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகள் வரை இக்குழுவினர் ரோந்து செல்வதை, பதிவேடுகளில் பதிவு செய்வது நடைமுறையில் இருந்தது. இதன் மூலம் வனப்பகுதி முழுவதும் ராேந்து செல்லப்பட்டதா என்பது கேள்வியாகவே இருந்தது. இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ‛சுவடு’ என்ற செயலி கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவினரிடமும் உள்ள செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் குழுவினர், எந்தெந்த வனப்பகுதியில் ரோந்து செல்கின்றனர் என்பதை வனத்துறை உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தவாரே கண்காணிக்க முடிந்தது. அத்துடன் 30 நாள்களில் குறிப்பிட்ட வனப்பகுதி முழுவதும் ரோந்து செல்லப்பட்டதா என்பதும் கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் புதிதாக உருவாக்கியுள்ள ‛எம்.ஸ்டிரைப்’ என்ற புதிய செயலி முதுமலை வனத்துறை அலுவலர்கள் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அதன் செயல்பாடு குறித்து பயிற்சியளிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் காெண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து மசினகுடி ரேஞ்சர் மாரியப்பன் கூறுகையில், ``வனப்பகுதிக்குள் ரோந்து செல்பவர்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கின்றனரா என்பதைக் கண்காணிக்க இதற்கு முன்பு சுவடு என்ற செயலியைப் பயன்படுத்தி வந்தாேம். இந்தச் செயலியின் உதவியுடன் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் முறையாக ராேந்துப் பணியில் ஈடுபடுகிறார்களா என்பது கண்காணிக்கப்பட்டது. அதேபாேல வனப்பகுதிக்குள் உள்ள விலங்குகள் நடமாட்டம்,  சமூக விரோதிகளின் ஊடுருவல் குறித்தும் கண்காணிக்கப்பட்டது. இதற்கு இணையான ‛எம்.ஸ்டிரைப்’ என்ற புதிய செயலியை, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கியுள்ளது. இதை அனைத்து புலிகள் காப்பகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று காேரிக்கையும் வைத்துள்ளது. எனவே, இச் செயலியின் பயன்பாடு குறித்து வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பிராந்திய மாெழிகளில் உள்ள இந்தச் செயலி, பயன்படுத்துவதற்கு எளிமையாக உள்ளது. தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்களில் முதுமலையில்தான் முதன் முதலாக இந்தச் செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது. முதுமலையில் உள்ள ‛கோர் பாரஸ்ட்’ முக்கிய வனப்பகுதிகளில் உள்ள 21 முகாம்களுள், 18 முகாம்களுக்கு, முகாமுக்கு ஒன்று என்ற அடிப்படையில் ‛எம்.ஸ்டிரைப்’ செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு மாெபைல் பாேன் வழங்கப்பட்டுள்ளது. அதேபாேல, ‛பஃப்பர் பாரஸ்ட்’ பகுதியில் உள்ள 22 முகாம்களுக்கும் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட பாேன் வழங்கப்பட்டுள்ளது.  இந்தச் செயலியில் ரோந்துப் பணிக்குச் செல்லும் வேட்டை தடுப்புக் காவலர்கள் வனப்பகுதிக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இறந்து கிடக்கும் விலங்குகள், புதிதாக கண்டறியப்படும் விலங்குகள் உள்ளிட்டவற்றின் புகைப்படங்களையும், வீடியாேக்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும், அவற்றை வாரம் ஒரு முறை பதிவிறக்கம் செய்து, அவர்கள் ராேந்து செய்யத் தவறிய இடங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும்’’ என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored