ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றம்!Sponsoredராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் இம்மாதம் 15-ம் தேதி நடக்கிறது.

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்கி இம்மாதம் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதி முன்பு உள்ள தங்க கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பருவதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

Sponsored


 
 

Sponsored


இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் தக்கார் மன்னர் குமரன்சேதுபதி, இணை ஆணையர் மங்கையர்க்கரசி, கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார்கள் ககாரின், அண்ணாதுரை, கண்ணன், கமலநாதன்,கலைச்செல்வம் மற்றும் சர்வ கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முரளிதரன், கே.அர்ச்சுனன், பாரிராஜன், தேவதாஸ், ஶ்ரீதர், ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான ஆடி அமாவாசை 11-ம் தேதியும் மறுநாள் காலை 10 மணிக்கு திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. 14-ம் தேதி பகல் 2 மணிக்கு ராமதீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலைமாற்றும் வைபவமும் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அன்று இரவு பூப்பல்லக்கில் பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலாவும் நடைபெறும். 15-ம் தேதி மாலை 7 - 8 மணிக்குள் திருக்கோயில் தெற்கு நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற உள்ளது. ஆடி திருக்கல்யாண திருவிழா நாள்களில் நாள்தோறும் காலை மாலை வேளைகளில் பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலாவும் அதைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.Trending Articles

Sponsored