`கருணாநிதியைப் பார்க்க முடியலையே’ - தி.மு.க கொடியோடு தீக்குளித்த நிர்வாகிSponsoredகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் தி.மு.க பிரமுகர் குமரன். 

சென்னை, கொரட்டூர் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரன். இவர் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84 வது வட்ட தி.மு.க துணைச் செயலாளராக இருந்தார். தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்தும் அங்கு சென்றார் குமரன். கடந்த நான்கு நாள்களாக அங்கு காத்திருந்தார். 

Sponsored


இந்தநிலையில், குமரன், கையில் தி.மு.க கொடியைப் பிடித்துக்கொண்டு பெட்ரோல் ஊற்றி இன்று தீக்குளித்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால், அவரை மீட்ட பொதுமக்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி குமரன் இறந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். குமரன், திருமணமானவர். ஆனால், குழந்தை இல்லை. 

Sponsored


இதுகுறித்து கொரட்டூர் பகுதி தி.மு.க-வினர் கூறுகையில். ``கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்ட தகவலைக் கேட்ட நாளிலிருந்து குமரன் மனவேதனையில் இருந்தார். எப்படியாவது கருணாநிதியைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் காவேரி மருத்துவமனைக்கு தினமும் சென்றார். ஆனால், அவரால் கருணாநிதியைப் பார்க்க முடியவில்லை. இந்த மனவருத்தத்தில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட குமரனுக்கு 44 வயதாகுகிறது. கட்சிப்பணிகளில் ஆர்வமாக ஈடுபடுவார். அவரை இழந்து தவிக்கிறோம்" என்றனர். Trending Articles

Sponsored