``நெரூர் - உன்னியூர் இடையில் காவிரியாற்றில் உயர்மட்ட பாலம்!’’ - தம்பிதுரை தகவல்!Sponsored 

``கரூர் மாவட்டம், கரூர் ஒன்றியத்துக்குட்பட்ட நெரூர்-உன்னியூர் காவிரியாற்றின் இடையே உயர்மட்டப் பாலம், சுற்றுவட்டச்சாலை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், கரூர் ஒன்றியம், நெரூர் வடபாகம் ஊராட்சிக்குட்பட்ட ஒத்தக்கடை காலனி, ஒத்தக்கடை, நெரூர், பழையூர், சின்னகாளிபாளையம், சின்னகாளிபாளையம் காலனி, பெரியகாளிபாளையம் காலனி, பெரியகாளிபாளையம், சேனப்பாடி காலனி, சேனப்பாடி, முனியப்பன் கோவில், மல்லம்பாளையம், முனியப்பனூர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மக்களவைத் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் தலைமையில் இன்று (04.08.2018) பொதுமக்களின் இருப்பிடத்துக்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களது அடிப்படை வசதிகளைக் குறித்து கேட்டறிந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.


 

\

Sponsored


இந்நிகழ்ச்சியில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்திருப்பது: ``தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களைத் தேடிச் சென்று அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று கோரிக்கைகளைக் கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் இந்த நிகழச்சி நடைபெறுகின்றது. மக்களின் தேவைகள் குறித்து, மக்களைச் சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மனுக்களை பெறுவதுடன் அப்பகுதியில் மக்களுக்குத் தேவையான சுகாதாரம், மின்சாரம், குப்பைகள் அகற்றுதல், கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் போன்ற கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களுக்குப் பதில் அளிக்கப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர், மின்விளக்கு தொடர்பாக மனுக்கள் வரப்பெறுகின்றன. அனைத்து மனுக்களும் பரிசிலீக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு முறையாக அனுப்பப்பட்டு விரைவில் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நிறைவேற்றுவதற்காக வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்ட முகாம் மாதந்தோறும் மக்கள் தொடர்பு முகாம் எனப் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், இ-பொதுசேவை மையங்கள், அம்மா அழைப்பு மையம், இணையதளம் வாயிலாகக் கோரிக்கை மனுக்கள் அளித்தல் போன்றவை நடைபெற்ற வருகிறது.

இவை அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய பதில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான நெரூர்-உன்னியூர் இடையே காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியும், சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படவுள்ளது" என்று தெரிவித்தார்.
 
 

Sponsored
Trending Articles

Sponsored