தேசிய நெடுஞ்சாலையை 3 மணி நேரம் ஸ்தம்பிக்க வைத்த மக்கள்! Sponsoredராம்கோ சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து வெளியில் வரும் லாரிகளால் பல்வேறு விபத்து ஏற்படுவதாகக் கூறி திருச்சி - சிதம்பரம் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்துப்போனது. 

அரியலூர் மாவட்டம், மயிலாண்ட கோட்டைக் கிராமத்தில் ராம்கோ சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இச்சுரங்கத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் சுண்ணாம்புக்கற்கள் ஆலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் இன்று மதியத்துக்கு மேல் அரியலூர் பகுதியில் மிதமான மழை பெய்தது. இதனால் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து வெளியில் வரும் லாரிகளின் டயர்களில் சுண்ணாம்பு மண் ஓட்டிக்கொண்டு வருகிறது. இந்த லாரிகள் சாலைகளில் செல்லும்போது டயர்களில் ஒட்டியுள்ள மண் சாலையில் படிகிறது. மேலும், மழையும் பெய்து கொண்டு இருப்பதால் சாலையில் படிந்த மண் கரைந்து சேறும் சகதியுமாகச் சாலை முழுவதும் படிந்துவிடுகிறது. 

Sponsored


Sponsored


இந்நிலையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் சேரும் சகதியுமான சாலை என்று தெரியாமல் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ``மழைக்காலங்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து வெளியில் வரும் லாரிகளின் டயர்களைக் கழுவி சாலையில் இயக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் சிமென்ட் ஆலைகளின் வாகனங்களை இயக்கக் கூடாது" என வலியுறுத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.Trending Articles

Sponsored