டிஜிட்டல் வியாபாரம்: பணத்தை இழந்த `நுங்கம்பாக்கம்’ படக்குழுவினர்!Sponsoredடிஜிட்டல் வியாபாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 1.02 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக, `நுங்கம்பாக்கம்’ திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

ஸ்வாதி கொலை வழக்கு குறித்து `நுங்கம்பாக்கம்’ என்ற திரைப்படத்தை இயக்குநர் ரமேஷ் செல்வன் இயக்கி தயாரித்துள்ளார். இவருடன் இணைந்து இந்தப் படத்தை ஜெய சுபா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுப்பையா என்பரும் தயாரித்துள்ளார். இருவரும் இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ரமேஷ் செல்வன்,  `நுங்கம்பாக்கம்’ படத்துக்கான டிஜிட்டல் வியாபாரத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் `பைரசி டீம் ஹெட்’ ஆக பணியாற்றிய சிவா என்பவர் எங்களை அணுகினார். அமேசான் நெட்வொர்க் நிறுவனத்தில் தங்கள் படத்தை விற்றுத் தருவதாகக் கூறி, அந்நிறுனத்தின் முகவர் பரத் ரெட்டி என்பவருடன் பேச வைத்து 2.2 கோடி ரூபாய்க்கு விற்பனையை உறுதி செய்தார்.

Sponsored


Sponsored


பின்னர், இதற்கான சர்வீஸ் சார்ஜ்சாக 2 லட்ச ரூபாய் பணத்தை சிவா பெற்றுக்கொண்டு, அமேசான் நிறுவனம் முன்பணமாகக் கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை அவருடைய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இது போன்று பலரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. சிவா மீது நடவடிக்கை எடுத்து, தங்களக்கு வர வேண்டிய ஒரு கோடியே இரண்டு லட்ச ரூபாய் பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்று கூறினர்.Trending Articles

Sponsored