இரவோடு இரவாக பணிநியமன ஆணைகள் வழங்கிய தேனி கலெக்டர்.. பின்னணி என்ன?Sponsoredதேனி மாவட்டத்தில், கலெக்டர் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக அங்கன்வாடி பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை அவர்களது வீட்டிற்கே சென்று அதிகாரிகள் வழங்கியுள்ளது தேனி மாவட்ட அரசு அலுவலர்கள் மட்டத்தில் பரவலாக பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 336 அங்கன்வாடி பணியாளர்கள், 22 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 362 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 720 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என  கடந்த ஆண்டு மாவட்டநிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், தங்கத்தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கி சிபாரிசுகளை அடுக்கினர். அனைவருக்கும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், பணி நியமனம் செய்யப்படவில்லை. அரசியல் தலையீடு தான் அதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில், அரசியல் மாற்றம் மற்றும் புதிய மாவட்ட கலெக்டர் வருகை என மீண்டும் அங்கன்வாடிப்பணியாளர்கள் நியமனக் கோரிக்கை எழுந்தது.

Sponsored


இந்நிலையில் நேற்று, தகுதி வாய்ந்த நபர்களுக்கு உடனே பணி நியமன ஆணைகளை நேரில் சென்று அவர்களின் கைகளில் கொடுக்கும் படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் கலெக்டர். அதன்படி நேற்று இரவு வரை 550 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் நேரில் வழங்கப்பட்டுள்ளன. இவ்வளவு மாதங்கள் உறங்கிக்கிடந்த அங்கன்வாடிப்பணியாளர்கள் நியமனம் திடீர் என உயிர்பெற காரணம் என்ன என்று கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்த போது, "முதலில் எந்த அரசியல் தலையீட்டில் நியமனம் நிறுத்தப்பட்டதோ, அதே அரசியல் தலையீட்டில் தான் தற்போது நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. எது எப்படியோ, அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தால், அங்கன்வாடிகளில் இருந்துவந்த வேலைப்பளு இனி குறையும்" என்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored