துணை வேந்தருக்கு நடந்த பணி ஓய்வு பாராட்டு விழா - வாகனங்ககளை உடைத்த மர்ம நபர்கள்..!



தஞ்சாவூர்  தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஜீப், ஒரு வேன் உள்ளிட்ட 3 வாகனங்களில் முகப்பு கண்ணாடியை மர்ம நபர்கள் கல்லால் உடைத்து சேதப்படுத்தினர். துணை வேந்தருக்கு நடத்தபட்ட பணி ஓய்வு பாராட்டு விழா ஒரு தரப்பினருக்கு பிடிக்க வில்லை. இதனால் அவர்கள் தான் இது போன்ற செயலை செய்துள்ளனர் என துணை வேந்தர் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பல்கலைகழக நிர்வாகத்தினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Sponsored


கடந்த மூன்று வருடமாக  தஞ்சாவூர் தமிழ்பல்கலைகழக துணைவேந்தராக  பணியாற்றியவர் பாஸ்கரன். இவர் சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதற்கான பாராட்டு  விழா நேற்று இரவு நடந்தது. இந்த விழாவில் தமிழ்பல்கலைக்கழகத்தை சேர்ந்த போராசியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்துக்கொண்டனர். இந்த நிலையில் பல்கலைகழகத்தில் பாஸ்கரன் துணை வேந்தராக பதவியேற்ற  நாள் முதல் அவர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் கூறப்பட்டு வந்தன. போராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாகவும், நியமனத்தில் முறைகேடுகள் செய்ததாகவும் மேலும் அவரே துணைவேந்தர் பதவியில் முறைகேடாக சேர்ந்தாகவும் பல்கலைகழகத்தின் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராக பேசி செயல்பட்டதாக கூறப்படுகிறது. 

Sponsored


Sponsored


மேலும் அந்த தரப்பினர்களை  பாஸ்கரன் எப்போதும் கண்டுக்கொள்ளமாலேயே இருந்துள்ளார். இதனால் அவர்கள் ஆத்திரத்தில் இருந்து வந்ததாகவும்  சொல்லப்படுகிறது. இதனையடுத்தே  பாஸ்கரனுக்கு பாராட்டு விழா நடத்துவது பிடிக்காமல் எதிர்தரப்பினர் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த  மூன்று வாகனங்களின் முகப்பு பகுதி கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பல்கலைகழக தரப்பிலேயே கூறுகின்றனர். இது குறித்து சிலரிடம் பேசினோம், ``பாஸ்கரனுக்கு நேற்று இரவு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவும் வழங்கபட்டது. பின்னர் விழா முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர். இன்று வழக்கம் போல் ஜீப்பை எடுக்க டிரைவர்கள் சென்ற போது கண்ணாடி உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் பாஸ்கரனுக்கும்  இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் பாஸ்கரன் சேதமைடந்த வாகனங்களை பார்வையிட்டார். இதை தொடர்ந்து தமிழ்பல்கலை போலீஸாரிடம், பதிவாளர் முத்துக்குமார் புகார் கொடுத்தார். அதன்பெயரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் தொடர்ந்த அவர்கள் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பல்கலைகழகத்தில் கட்டிடங்கள் அமைந்துள்ள வளாகத்தின் முக்கிய பகுதியான முகப்பு பகுதி மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பகுதிகளில் சி.சி.டி.வி, கேமராக்கள் இல்லை. இதனால் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை கண்டறிவதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல பேர் வந்து செல்லும் இடமான இங்கு போதிய சிசிடி கேமரா பொறுத்தாமல் மெத்தனமாக இருந்துள்ளனர் நிர்வாகத்தினர் என்றனர்.



Trending Articles

Sponsored