`ரூ.20 லட்சத்தில் அரசு ஒப்பந்ததாரரால் கழிவறைதான் கட்ட முடியும்' - அதிர வைத்த மத்திய அமைச்சர்!Sponsored20 லட்சம் ரூபாயில் தனியார் கட்டடம் கட்டினால் பெரிய மாளிகையே கட்டமுடியும். ஆனால் அரசு ஒப்பந்ததாரர் மூலம் 20 லட்சம் ரூபாய்க்கு கழிவறைதான் கட்ட முடியும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது அரங்கத்தை அதிரவைத்தது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சப் கோர்ட் புதிய கட்டடம் திறப்புவிழா நேற்று மாலை நடந்தது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா புதிய கட்டடங்களை திறந்துவைத்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "இந்த கோர்ட்டில் நான் குற்றவாழியாகவும், சாட்சியாகவும் கூண்டில் நின்றிருக்கிறேன். வழக்கறிஞராகவும் இந்த கோர்ட்டில் வந்தது நினைவுக்கு வருகிறது. குமரி மாவட்ட மக்கள் சட்டம் சார்ந்து நிற்கக்கூடியவர்கள். அதனால் நிமிர்ந்து நின்று பழக்கப்பட்டவர்கள். கோர்ட்டை ஒட்டியுள்ள இரணியல் காவல் நிலையத்தில் கைதியாக நிறையமுறை இருந்திருக்கிறேன். வழக்கறிஞர்களுக்கு ஓய்வு அறை கட்டிகொடுக்க வேண்டும் என நீதியரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Sponsored


பாராளுமன்ற உறுப்பினரின் ஐந்து ஆண்டின் கடைசி காலகட்டம். இதனால் குறைந்த அளவு நிதிதான் உள்ளது. கிராமங்களுக்கு நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும். எனவே எனது நிதியில் 20 லட்சம் ரூபாய் எப்போது வேண்டுமானாலும் வழங்க தயாராக இருக்கிறேன். நீதித்துறை சார்பிலும் பணம் ஒதுக்க வேண்டியிருக்கும். ஏனென்றால், 20 லட்சம் ரூபாயில் தனியார் கட்டடம் கட்டினால் பெரிய மாளிகையே கட்டமுடியும். ஆனால் அரசு ஒப்பந்ததாரர் மூலம் 20 லட்சம் ரூபாய்க்கு கழிவறைதான் கட்ட முடியும். கட்டுமான பணிக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு நீதித்துறை சார்ந்த கட்டுமான பணிகளுக்கு 2665 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் கட்டுமான பணிக்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு வழக்கறிஞர்கள் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

Sponsored
Trending Articles

Sponsored