கணவனின் மதுப் பழக்கத்தால் பலியான மூன்று உயிர்கள் -குமரியில் சோகம்!Sponsoredகணவனின் மதுப்  பழக்கத்தால் இரண்டு குழந்தைகளை கொலை செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.

நாகர்கோவிலில் எஸ்.எல்.பி தெற்குத்தெருவை சேர்ந்தவர் அருண் என்ற அருணாச்சலம். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஐசக்(2) என்ற மகனும், ரிப்கா(4) என்ற மகளும் இருந்தனர். அருணுக்கும் சரண்யாவுக்கும் திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. அருண், மதுக்குடிக்கும்  பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு அருண் மது குடித்துவிட்டு வந்ததால் கணவனுக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை மனைவியைத்  திட்டிவிட்டு அருண் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்தபோது சரண்யா தூக்கில் தொங்கிய நிலையிலும், இரண்டு குழந்தைகளும் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தும் கிடந்துள்ளனர். இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டாறு போலீஸார் அங்குச் சென்று விசாரணை நடத்தினர். மது குடித்துவிட்டு வந்து கணவன் தகராறு செய்ததால் 2 குழந்தைகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவனின் குடி பழக்கத்தால் தாய் மற்றும் இரண்டு குழந்தைகளின் உயிர்ப் பலியாகிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored