ஊட்டியில் ரயில்வே இன்ஸ்டிடியூட் -கட்டடப் பணிகள் தீவிரம்!Sponsoredஇந்திய ரயில்வே போர்டு தலைவர் அஷ்வினி லாேகினி,  ரயில்வே துறையில் உள்ள முதல் நிலை முதல் கடை நிலை ஊழியர்கள் வரை, ரயில்வே துறையில் உள்ள பாெறியியல், எலக்ட்ரிக்கல், கண்காணிப்பு, கணக்கு, பாேக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் துறைகள் குறித்தும், ரயில்வே என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது? பேன்றவற்றை தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக, ரயில்வே டிரைனிங் இன்ஸ்டிடியூட்களை, இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே காேட்டங்களிலும் அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்தியாவில் உள்ள 69 காேட்டங்களிலும், ரயில்வே இன்ஸ்டிடியூட் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்காெள்ளப்பட்டன. குறிப்பாக, ஏற்கனவே கட்டட வசதிகள் இருக்கும் ரயில்வே காேட்டங்களில் பயிற்சிகள் துவங்கி, நடந்து வருகிறது. இந்நிலையில், அன்மையில் கடைசியாக ஏற்படுத்தப்பட்ட சேலம் காேட்டத்திற்கான ரயில்வே டிரைனிங் இன்ஸ்டிடியூட், நீலகிரி மாவட்டம், ஊட்டி ரயில் நிலைய வளாகத்தில் கட்டப்படுகிறது.

இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், ‛‛ கட்டட வசதி உள்ள ரயில்வே காேட்டங்களில், இத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும், அனைத்துத் துறைகளின் செயல்பாடு குறித்தும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக ரயில்வே டிரைனிங் இன்ஸ்டிடியூட்கள் மூலம் பயிற்சி பெற்றுவருகிறார்கள்’’என்றார். நீலகிரி மாவட்டம் ஊட்டி ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே டிரைனிங் இன்ஸ்டிடியூட் கட்டடம் கட்டும் பணிகள் விரைந்து நிறைவுபெறும் என்ற எதிர்பார்ப்பில் ஊழியர்கள் காத்திருக்கின்றனர். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored