வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் பல கோடி ஊழல் -லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி!Sponsoredசிதம்பரம் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், பணி செய்த ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

சிதம்பரம் நகராட்சியில் ஆயிரக்கணக்கானமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் கடந்த 2012 -ம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் வீடுகளுக்குக்  குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகத்  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்குப்  புகார் மனுக்கள் அனுப்பப்பட்டது. ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் பொது மக்கள் இது குறித்து பல்வேறு புகார் மனுக்களை கடலூர்

Sponsored


லஞ்ச ஒழிப்பு துறைக்கும் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த சில மாதங்களாக இது குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளில் வீடுகளுக்குக்  குடிநீர் வடிகால் வாரியத்தில் ரூபாய் 7 கோடியே 18 லட்சம் மதிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளர்களாக பணியாற்றியும், தற்பொழுதும் பணியாற்றி வரும் பொறியாளர்கள் விஜயகுமார், பாண்டியன், அசோகன், விஜயலெட்சுமி, காசிநாதன் ஆகிய 5 பேர் மீது  கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசரர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்தப்  பணிகளை செய்த சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த விவிவி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் மீதும் வழக்குப்  பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sponsored


இவர்கள் மீது தரமில்லாத பொருட்களைப் பயன்படுத்தியது, போலியான ஆவணம் மற்றும் ரசீதுகளை வைத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்பட்டுள்ள சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Trending Articles

Sponsored