எப்படி இருக்கிறார் கருணாநிதி? - கவலையில் குடும்ப உறவுகள்Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவி வருகின்றது. நேற்று முன்தினம், நள்ளிரவு முதல் அவரது உடலில் ரத்த அழுத்தம் மற்றும் மஞ்சள் காமாலை தொடர்பான பிரச்னைகள் நீடிப்பதாக குடும்ப உறவுகள் தெரிவிக்கின்றனர்.

வயது முதிர்வு காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக, தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.  கடந்த மாதம் 27-ம் தேதி இரவு  திடீர் ரத்த அழுத்தத்தால் கோபாலபுரம் இல்லத்திலிருந்து, சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் கருணாநிதி. அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலிருந்து வரும் அவரது உடல்நிலை குறித்து, காவேரி மருத்துவமனை அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டது. மருத்துவர்களே ஆச்சரியமடையும் அளவுக்கு, கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. மருத்துவர்கள் வழங்கி வரும் சிகிச்சைக்கு, அவரது உடல் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கருணாநிதி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் கடந்த நிலையில்,  அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறிய, குடும்பத்தாரிடம் பேசினோம். `மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருகிறார் கருணாநிதி. ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவு 1மணி அளவில்,  அவரது உடல்நிலையில் திடீரென ஏற்ற இறக்கம் காணப்பட்டது. நாடித்துடிப்பு ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்தது.  இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தோம். பின்னர் அவருக்கு தீவிரமான சிகிச்சை வழங்கப்பட்டதால், சற்று நேரத்தில்  அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியது.

Sponsored


Sponsored


கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திலிருந்து, காவேரி மருத்துமனைக்கு கொண்டு சென்ற மறுநாளிலிருந்தே அவருக்கு மஞ்சள் காமாலையின் தாக்கம் இருந்து வந்தது. அந்தத் தாக்கம் குறைந்தபாடில்லை. அதற்கான மருந்துகளை மருத்துவர்கள் அவருக்கு அளித்து வருகின்றனர். இருப்பினும்  அந்த மருத்துகளை ஏற்றுக்கொள்ளவதில், அவரது உடலுக்குள் சிக்கல் நிலவுகிறது. இதை சரிசெய்வதற்கான சிகிச்சையையும் மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். மேலும், சிறுநீரகப் பாதையில் இரண்டு இடத்தில் கருணாநிதிக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல கல்லீரல் தொடர்பாகவும் சில பிரச்னைகள் இருந்து வருகிறது. இதற்காக  கல்லீரல் சிகிச்சை நிபுணர், முகமது ரேலா  தலைமையிலான குழுவினர் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.  இதையெல்லாம் தாண்டி தி.மு.க தலைவர் கருணாநிதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்' என நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர் குடும்ப உறவுகள்.Trending Articles

Sponsored