ஏ.டி.எம் மிஷினில் இருந்த பணம்; நேர்மையினால் நெகிழ வைத்த இளைஞர்Sponsoredதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம் மிஷினில் வெளியில் கிடந்த பணத்தைப் பார்த்து சபலப்படாமல், வங்கி நிர்வாகத்திடம் ஒப்படைத்திருக்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். இவரின் நேர்மையைப் பார்த்து பலரும் நெகிழ்ச்சியோடு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கும்பகோணம் அருகே உள்ள புளியஞ்சேரியைச் சேர்ந்தவர் செந்தில்வேலன். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கும்பகோணத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்குச் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு யாரும் இல்லாத நிலையில் ஏ.டி.எம். மிஷினில் வெளியில் வந்த நிலையில் பத்தாயிரம் ரூபாய் இருந்திருக்கிறது. இந்த பணத்தை வங்கி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நோக்கத்தோடு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் செந்தில்வேலன். காவல்துறை ஆய்வாளர் அங்கு வந்தவுடன் வங்கி நிர்வாகத்திடம் இந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பணத்துக்கு சபலப்படாமல் நேர்மையுடன் நடந்துகொண்ட செந்தில்வேலனை வங்கி அதிகாரிகள், காவல்துறையினர் மட்டுமல்லாமல் இப்பகுதி மக்களும் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்கள்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored