மேற்கூரை உடைந்த நிலையில் செயல்படும் அங்கன்வாடி - பெற்றோர்கள் அச்சம்!திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட கிராமம் பணப்பாக்கம். இந்தக் கிராமத்தில்  பழைய பணப்பாக்கம் என்ற பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேற்கூரையின் ஓடுகள் இடிந்து காணப்படுகிறது. அதேபோல் சுவர்களிலும் விரிசல்கள் ஏற்பட்டு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கட்டடம் குழந்தைகளுக்குப்  பாதுகாப்பானதாக இல்லை. பெற்றோர்கள் அச்சத்துடன் தான் குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர்.  

Sponsored


Sponsored


இந்த அங்கன்வாடி மையத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.  இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பல முறை புகார் கடிதங்களை எழுதி அனுப்பி உள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.  குழந்தைகளின் உயிர்களை நினைவில் வைத்து அதிகாரிகள் விரைவில் மையக் கட்டடத்தை சீரமைத்து அல்லது புதிய கட்டடம் அமைத்துத் தரவேண்டும் என்கிறார்கள் பணப்பாக்கம் கிராம பொதுமக்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று கிராம மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

Sponsored
Trending Articles

Sponsored