சர்வதேச இளைஞர் விழா - சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட அறிமுக விழா!Sponsoredசென்னை சர்வதேச இளைஞர் விழாவின் அறிமுக நிகழ்ச்சி வேளச்சேரியில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இளைஞர் வளர்ச்சி கூட்டமைப்பு (YDC), பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் இணைந்து நடத்தும் 2018-ம் ஆண்டின் சென்னை சர்வதேச இளைஞர் விழா 2.0 (Chennai International Youth Fest 2.0)வின் தொடக்க விழா நடைபெற்றது. சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவில் மொரீசியஸ் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் யோகிதா சாமிநாதன் மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் CIYF-யின் பரிசுக் கோப்பையை திறந்து வைத்து, விழாவைத் தொடங்கி வைத்தனர்.

Sponsored


Sponsored


இவ்விழா CIYF-ன் சேர்மன் அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் முன்னலையில் நடைபெற்றது. உலகின் அதிக இளைஞர்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 16 நாள்கள் நடைபெறும் இவ்விழா செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது. 250-ம் மேற்பட்ட போட்டிகள், தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. இறுதியாக பரிசளிப்பு விழா செப்டம்பர் 16-ல் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.Trending Articles

Sponsored